THR Raaga Ellorum Kondaduvom Concert | Press Release | Mediaroom | Astro

THR Raaga Ellorum Kondaduvom Concert

THR Raaga Ellorum Kondaduvom Concert

அஸ்ட்ரோ வர்த்தக விழாவில் களைக் கட்டியது ராகாவின் “எல்லோரும் கொண்டாடுவோம்” நிகழ்ச்சி

கோலாலம்பூர், அக்டோபர் 7, 2016 – கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டியில் அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2016, டிஎச்ஆர் ராகாவின் “எல்லோரும் கொண்டாடுவோம்” நிகழ்ச்சியுடன் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடந்தேறியது.

இந்நிகழ்ச்சியின் முதல் அங்கமாக Timebreakers motorsports கார்களுடன் ராகாவின் அறிவிப்பாளர்கள் தங்களுடைய சக அறிவிப்பாளர்களுடன் வந்து இறங்கினார்கள்.

ஆனந்தா, உதயா, ராம், ரேவதி, சுரேஷ், கவிமாறன், கீதா, அகிலா, ஷாலு, ஜெய், யாசினி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இடைவிடாத ஆடல் பாடல் என பல அற்புதமான படைப்புகள் படைத்தார்கள்.

அதை வேளையில் டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்களுடன் இணைந்து 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ராகாவின் ஸ்டார் யார் போட்டியின் இறுதிச்சுற்றின் போட்டியாளர்களான வேலராசன், நரேஷ், டர்ஷாமினி மற்றும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுடைய அசத்தலான படைப்புகளால் இரசிகர்களின் கைத் தட்டல்களைப் பெற்றனர்.

ஆடல் பாடல் மட்டுமின்றி “கடலிலே முளைத்த கருவேப்பில்லை” மற்றும் “நேத்து சுட்ட முறுக்கு” - என இரண்டு குழுக்களாக களைமிறங்கிய இவர்கள் நிகழ்ச்சியை மேலும் களைக் கட்ட செய்தது. இப்போட்டியில் இரு  குழுக்களின் மிகச் சிறப்பான படைப்புகளை மக்களைக் கவர்ந்தது.

அதுமட்டுமின்றி, வந்திருந்த இரசிகர்களுக்காக ராகாவின் அறிவிப்பாளர் சுரேஷ் மற்றும் உதயா பல போட்டி விளையாட்டுகளையும் ஏற்று நடத்தி ராகாவின் சட்டைகளைப் பரிசாக வழங்கினார்கள்.

ராகாவின் தீபாவளி பாடலுடன் இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது.