Astro ‘Vizhuthugal’ rewards viewers with gold bars to celebrate its 10th anniversary | Press Release | Mediaroom | Astro

Astro ‘Vizhuthugal’ rewards viewers with gold bars to celebrate its 10th anniversary

Astro ‘Vizhuthugal’ rewards viewers with gold bars to celebrate its 10th anniversary

அஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியின் 10-வது ஆண்டு முன்னிட்டு இரசிகர்களுக்கு தங்கக் கட்டிகள்

10-வது ஆண்டு முன்னிட்டு அஸ்ட்ரோவின் விழுதுகள் நிகழ்ச்சி இரசிகர்களுக்கு 120 தங்கக் கட்டிகளை ‘விழுதுகள் 10 பரிசு போட்டி’ வாயிலாக வழங்கவுள்ளது. இப்போட்டி அஸ்ட்ரோ வானவில், அஸ்ட்ரோ விண்மீன் எச்டி மற்றும் அஸ்ட்ரோ கோ-வில் இடம்பெறும்.

இதை குறித்து அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், “எங்களின் விழுதுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சி இம்மாதத்துடன் 10 வருடம் ஆகின்றது. இவை எங்களுக்கு ஒரு முக்கியமான மைல்கலாகும். இவ்வேளையில் இரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையிலும் அவர்களுக்குப் பரிசாக ‘விழுதுகள் 10 பரிசு போட்டி’ ஏற்றி நடத்தவுள்ளோம். அதை வேளையில், எதிர்வரும் காலங்களில் இரசிகர்கள் இந்நிகழ்ச்சியில் வாயிலாகப் பல புதிய விஷயங்களை எதிர்பார்க்கலாம்”.

இந்தப் போட்டி எதிர்வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தொடக்கம் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி வரை பனிரெண்டு மாதங்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு மாதமும் 2 கிராம் மதிப்புள்ள தங்கக் கட்டியைப் பரிசாகத் தட்டிச் செல்லும் வாய்ப்பு காத்து கொண்டிருக்கின்றது.

புதிய திறமையான அறிவிப்பாளர்களை உருவாக்கும் நோக்கில், இன்னும் சில நாட்களில் மலரவுள்ள விழுதுகள் நிகழ்ச்சியின் புதிய பாகத்தை ஒரு மாத காலத்திற்கு தற்போதுள்ள அறிவிப்பாளர்களுடன் இணைந்து ரேவதி மாரியப்பன், ஸ்ரீ குமரன் முனுசாமி, செல்வகுமாரி செல்வராஜூ, கபிலஸ் கணேசுன், குணசீலன் சிவகுமார், அகலியா மணியம் ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள்.

திங்கள் முதல் வெள்ளி காலை மணி 9.30 தொடக்கம் 11.00 மணி வரை இடைபெறும் இந்நிகழ்ச்சியில் என்ன செய்தி, அமைச்சு அறிமுகம், மனம், பெண்கள் எனப் பல புத்தம் புதிய அங்கங்களை இரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

அதுமட்டுமின்றி, அடுத்த மாதம் மே முதல் வடக்கிலிருந்து தெற்குயிலுள்ள குறிப்பிட்ட ஒரு சில மாநிலங்களில் இந்நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்கள் மக்களைச் சந்தித்து பல நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்கள்.

எவ்வாறு விழுதுகள் 10 பரிசு போட்டியில் கலந்து கொள்ளுவது?

1.       திங்கள் முதல் வெள்ளி காலை மணி 9.30 தொடக்கம் 11.00 மணி வரை அஸ்ட்ரோ வானவில், அஸ்ட்ரோ விண்மீன் எச்டி மற்றும் அஸ்ட்ரோ கோ-வில் ஒளியேறும் விழுதுகள் நிகழ்ச்சியைக் கண்டு களியுங்கள்.

2.       இப்போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் www.astroulagam.com.my/vizhuthugal10 அகப்பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

3.       இந்நிகழ்ச்சியின் போது தொலைக்காட்சியில் இடம்பெறும் 2 கேள்விக்கும் 30 சொற்களில் கொடுக்கப்பட்ட சுலோகத்தையும் பூர்த்து செய்யவும்.

4.       தொலைக்காட்சியில் கொடுக்கப்படும் குறியீடுயுடன் (unique code) உங்களின் பதில்களை அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கவும். அஞ்சல் முகவரி - Vizhuthugal 10 Parisu Potti, Indian Production, All Asia Broadcast Centre Technology Park Malaysia, Bukit Jalil. மின்னஞ்சல் - Vizhuthugal 10 Parisu [email protected]

5.       வெற்றியாளர்களின் பெயர் பட்டியல் விழுதுகள் நிகழ்ச்சியிலும் அஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்திலும் இடம்பெறும்.